PAK vs NZ: பாபர் அசாம் அபார சதம்.. சர்ஃபராஸ் அகமது நிலையான பேட்டிங்

By karthikeyan VFirst Published Dec 26, 2022, 3:17 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில் பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

AUS vs SA: 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை பொட்டளம் கட்டிய மும்பை இந்தியன்ஸ் குதிரை..! ஆஸ்திரேலியா அபாரம்

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 7 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஷான் மசூத் 3 ரன்களுக்கும், சௌஷ் ஷகீல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸுக்கு வலுசேர்க்கும் சாம் கரன்.. உத்தேச ஆடும் லெவன்

கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக பேட்டிங்  ஆடி சதமடித்தார். அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சீனியர் வீரர் சர்ஃபராஸ் அகமது, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார். பாபர் அசாம் - சர்ஃபராஸ் அகமது பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து தொடர்ந்து வருகிறது. சர்ஃபராஸ் அகமது அரைசதத்தை நெருங்கியுள்ளார்.
 

click me!