சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ஐசிசி ரேங்கிங் ரெக்கார்டை தகர்த்த பாபர் அசாம்..! தரமான சம்பவம்

Published : Apr 07, 2022, 09:59 PM ISTUpdated : Apr 07, 2022, 10:01 PM IST
சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ஐசிசி ரேங்கிங் ரெக்கார்டை தகர்த்த பாபர் அசாம்..! தரமான சம்பவம்

சுருக்கம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிகமான புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் அசாம்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பாபர் அசாம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளில் மிக அருமையாக பேட்டிங் ஆடினார் பாபர் அசாம். டெஸ்ட் தொடரில் 390 ரன்களை குவித்தார் பாபர் அசாம். அந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பாபர் அசாம்.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் அபாரமாக பேட்டிங் ஆடி 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து, பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடியதன் விளைவாக ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 891 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதன்மூலம், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த வீரர்கள் பட்டியலில் 15வது இடத்தை பிடித்துள்ளார் பாபர் அசாம். இதற்கு முன், 887 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் தான் 15வது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் அசாம்.

இந்த பட்டியலில் விவியன் ரிச்சர்ட்ஸ்(935 புள்ளிகளுடன் முதலிடம் வகித்துள்ளார்) முதலிடத்தில் உள்ளார். ஜாகீர் அப்பாஸ்(931) 2ம் இடத்திலும், க்ரெக் சேப்பல் (921) 3ம் இடத்திலும் உள்ளனர்.  விராட் கோலி இந்த பட்டியலில் (911) ஆறாம் இடத்தில் உள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!