LSG vs DC: பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. மற்றவர்கள் திணறல்..! லக்னோ அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்த டெல்லி அணி

Published : Apr 07, 2022, 09:29 PM IST
LSG vs DC: பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. மற்றவர்கள் திணறல்..! லக்னோ அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்த டெல்லி அணி

சுருக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் 20 ஓவரில் 149 ரன்கள் அடித்து 150 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. வார்னர் மற்றும் நோர்க்யா ஆடுவதால் டிம் சேஃபெர்ட் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் நீக்கப்பட்டனர். மேலும் மந்தீப் சிங் நீக்கப்பட்டு சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான்,லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மனீஷ் பாண்டேவிற்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டார். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல்  பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய்,  ஆவேஷ் கான்.

பிரித்வி ஷாவும் டேவிட் வார்னரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்கம் முதலே வழக்கம்போல அடித்து ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரிகளாக விளாசினார். அடித்து அனைவருக்கும் ஷோ காட்டும் டேவிட் வார்னரை மறுமுனையில் நிற்க வைத்து ஷோ காட்டினார் பிரித்வி ஷா. பவர்ப்ளேவை பயன்படுத்தி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 34 பந்தில் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி அணியின் ஸ்கோரே 67 தான். அதில் 61 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது.

அதன்பின்னர் வார்னரை வெறும் 4 ரன்களுக்கு வீழ்த்திய ரவி பிஷ்னோய், ரோவ்மன் பவலை 3 ரன்களுக்கு அனுப்பிவைத்தார். அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் சர்ஃபராஸ் கானும் இணைந்து அடித்து ஆட முயற்சித்தனர். ஆனால் லக்னோ அணி பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக மிகவும் மந்தமாக ஆடிய ரிஷப் பண்ட், ஆண்ட்ரூ டையின் பவுலிங்கில் மட்டும் சில பெரிய ஷாட்டுகளை ஆடினார். ஆனால் ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான் ஆகியோரின் பவுலிங்கில் ரிஷப் - சர்ஃபராஸ் கானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ரிஷப் பண்ட் 36 பந்தில் 39 ரன்களும், சர்ஃபராஸ் கான் 28 பந்தில் 36 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி, 150 ரன்கள் என்ற எளிய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?