
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்த டெல்லி அணி, இந்த போட்டியில் வார்னரின் வருகையால் வலுவான அணியாக இறங்குகிறது. முதல் 2 போட்டிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடாத வார்னர் மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 2 பெரிய வீரர்கள் அணியில் இணைவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வார்னர் மற்றும் நோர்க்யா ஆடுவதால் டிம் சேஃபெர்ட் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மந்தீப் சிங் நீக்கப்பட்டு சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான்,லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மனீஷ் பாண்டேவிற்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.