எல்லோரும் கேட்டாங்க, பவுண்டரி லைனை தொட்டயா? சூர்யகுமார் யாதவிற்கும் கூட சந்தேகம் –அக்‌ஷர் படேல் விளக்கம்!

By Rsiva kumar  |  First Published Jul 21, 2024, 12:34 PM IST

சூர்யகுமார் யாதவ் கடைசி நிமிடத்தில் பிடித்த அந்த ஒரு கேட்ச் இந்தியாவிற்கு டிராபி வென்று கொடுத்தது. அப்போது எல்லோரும் பவுண்டரி லைனை தொட்டயா என்று கேட்டார்கள் என்று அவரிடம் கேட்டதாக அக்‌ஷர் படேல் கூறியுள்ளார்.


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. கடைசியில் தென் ஆப்பிரிக்கா அணியும் இறுதிப் போட்டிக்கு சென்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கடைசி ஒவரில் தென் ஆப்பிரிக்கா 16 ரன்கள் எடுத்தால் டி20 உலகக் கோப்பை டிராபியை முதல் முறையாக வெல்லும் என்ற நிலை இருந்தது.

CSK, IPL 2024: ரிஷப் பண்ட்டை விடுவிக்கும டெல்லி கேபிடல்ஸ்–சந்தோஷமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் பண்ட்?

Tap to resize

Latest Videos

undefined

ஹர்திக் பாண்டியா 20ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மில்லர் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் லாவகரமாக பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடித்தார். இந்த ஒரு கேட்ச் தான் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. அந்த ஓவரில் தென் ஆப்பிரிக்கா 8 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலமாக இந்திய அணி 2அவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பற்றி ஒவ்வொருவரும் கேட்டதாக அக்‌ஷர் படேல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, அவர் பிடித்த கேட்சில் உறுதியாக இருந்த அவர், சிறிது நேரத்திலேயே இல்லை இல்லை எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறினார்.

RCB Retained Players:ஆர்சிபிக்கு தாவும் கேஎல் ராகுல் – ஃபாப் டூப்ளெசிஸூக்கு பிறகு ஆர்சிபி கேப்டனாக வர வாய்ப்பு

அதன் பிறகு டிவி ரீப்ளேயில் பார்க்கும் போது 99 சதவிகிதம் கேட்ச் உறுதியானது. இக்கட்டான சூழலில், அவர் தனது சமநிலையை கூலாக வைத்திருந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பதற்றத்தில் கேட்சை விடவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா. ஆனால் அவர் அவ்வளவு அருமையாக அந்த கேட்சை பிடித்து இந்திய அணி டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு துணிச்சல், தைரியம் இருந்தால்……முதல் முறையாக சானியா மிர்சா உடனான திருமணம் குறித்து பதிலளித்த ஷமி!

click me!