வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற ஆவேஷ் கான் துலீப் டிராப் போட்டியின் போது காயம் அடைந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியெல்லாம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்: சவுரவ் கங்குலி கணிப்பு!
இதில், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார், உம்ரான் மாலிக் என்று 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில், துலீப் டிராபியில் விளையாடி வந்த ஆவேஷ் கானுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் கன்ஃபார்ம்!
பீல்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் பந்து வீசிய நிலையில், அவருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஆவேஷ் கானுக்கு தற்போது அணியில் இடம் கிடைத்தும், காயம் காரணமாக அவர் விலகும் சூழல் கூட ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போது இளம் வீரர்களும் காயம் அடைந்த நிலையில், அவருக்குப் பதிலாக எந்த வீரரை தேர்வு செய்யலாம், என்று தேர்வுக்குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆவேஷ் கானுக்குப் பதிலாக தீபக் சாஹருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.