டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமான டாஸ்

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 7:27 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது. ஏனெனில் துபாயில் கடைசியாக ஆடிய 16 டி20 போட்டிகளில் ஐபிஎல் ஃபைனலை தவிர மற்ற அனைத்து(15) போட்டிகளிலும் 2வதாக பேட்டிங் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தவகையில், முக்கியமான இந்த டாஸை ஆஸ்திரேலிய அணி ஜெயித்திருக்கிறது.

முதலில் பேட்டிங் ஆடி, 2வது பேட்டிங் ஆடும் அணியை இலக்கை விரட்டவிடாமல் கட்டுப்படுத்துவது பாகிஸ்தான் அணிக்கு கடும் சவாலான காரியம். 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு காரணமாக பந்துவீசுவது கடினமாக இருக்கும். அது 2வது பேட்டிங் ஆடும் அணிக்கு சாதகமாக அமையும்.

இந்த போட்டியில் ஆடும் இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்குகின்றன.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் ஷா அஃப்ரிடி.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!