இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதே போன்று ஆஸ்திரேலியா அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட்
இதுவரையில் இரு அணிகளும் 13 உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 8 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன. 2023 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. உலகக் கோப்பை தொடரின் 45 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
நியூசிலாந்திற்கு எதிராக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் 6 உலகக் கோப்பை தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ளார். கடந்த 1992, 1996, 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு முகமது அசாரூதீன் கேப்டனாக இருந்துள்ளார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சவுரவ் கங்குலி கேப்டனாகவும், 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ராகுல் டிராவிட் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
IND vs AUS World Cup Final: இந்திய அணிக்கு மணல் சிற்பத்தின் மூலமாக சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!
அதன் பிறகு 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை எம்.எஸ்.தோனி வழிநடத்தினார. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு விராட் கோலி கேப்டனாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6ஆவது உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றி சச்சினுக்கு அர்ப்பணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.