இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி – 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான யூனிட் தேர்வை ஒத்தி வைத்த முதல்வர்!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பப்ளிக் பள்ளியில் இன்று நடக்க இருந்த யூனிட் தேர்வை உலகக் கோப்பை இறுதிப் போட்டி காரணமாக பள்ளி முதல்வர் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வந்தது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

India vs Australia:இந்தியா டிராபியை கைப்பற்ற மதுரையில் ஆலால சுந்தர விநாயகருக்கு 1008 தேங்காய் உடைத்து வழிபாடு!

Latest Videos

இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின. இதில், இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் 2 ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

IND vs AUS World Cup Final: இந்த நாளுக்காக காத்திருந்தோம் – டிராபியை கைப்பற்றுவோம் என நம்புகிறோம் – சச்சின்!

இந்த நிலையில் தான் இறுதிப் போட்டி காரணமாக பள்ளியில் நடக்க இருந்த யூனிட் தேர்வை ஒத்தி வைத்து ஃபரிதாபாத்தில் உள்ள டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பள்ளி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.  பள்ளி மாணவர்களிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க, 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு 20ஆம் தேதி நடக்க இருந்த யூனிட் தேர்வை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

IND vs AUS World Cup Final: இந்திய அணிக்கு மணல் சிற்பத்தின் மூலமாக சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!

எல்லா வயதினரும், எல்லாத் தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய விளையாட்டு என்பதால், குடும்பங்களை ஒன்றிணைக்க கிரிக்கெட் ஒரு சிறந்த வழி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த குடும்ப நேரத்தை நாங்கள் உங்களுக்கு வழங்கும்போது, ​​வரவிருக்கும் தேர்வுகளில் (உலகக் கோப்பை இறுதிப் போட்டி) சிறப்பாக செயல்பட்டு பள்ளிக்கு நன்றி சொல்வீர்கள் என்று நம்புகிறோம். இந்திய அணியானது டிராபியை கைப்பற்ற ஒன்றாக பிரார்த்தனை செய்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS Final: பாதுகாப்பு பணியில் 23 டிஜிபி, 4 மூத்த ஐபிஎஸ், ஐஜி, டிஐஜி அதிகாரி உள்ளிட்ட 6000 போலீசார்!

 

A school in Faridabad postponed Unit Test due to World Cup Final. pic.twitter.com/IZ0jY6MSPw

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!