Australia vs England: லபுஷேன் சதம்; சதத்தை தவறவிட்ட ஸ்மித், வார்னர்! முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மெகா ஸ்கோர்

Published : Dec 17, 2021, 04:13 PM IST
Australia vs England: லபுஷேன் சதம்; சதத்தை தவறவிட்ட ஸ்மித், வார்னர்! முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மெகா ஸ்கோர்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்  போட்டி அடிலெய்டில் நேற்று(டிசம்பர் 16) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டேவிட் வார்னரும், லபுஷேனும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடி சதத்தை நெருங்கிய வார்னர் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

அதன்பின்னர் லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து நன்றாக ஆடினர். லபுஷேன் 21 ரன் மற்றும் 95 ரன்னில் இருந்தபோது கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பையும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கோட்டைவிட, அந்த வாய்ப்பை பயன்படுத்தி சதமடித்த லபுஷேன் 2ம் நாள் ஆட்டமான இன்று 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்னில் ஆட்டமிழந்து வார்னரை போலவே, ஸ்மித்தும் சதத்தை தவறவிட்டார்.

டிராவிஸ் ஹெட் (18), கேமரூன் க்ரீன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அலெக்ஸ் கேரி (51), மிட்செல் ஸ்டார்க் (39) மற்றும் மைக்கேல் நெசெர் (35) ஆகிய மூவரும் நன்றாக ஆட, 473 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!