2021ம் ஆண்டின் டாப் 5 டெஸ்ட் பவுலர்கள்..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு.. நம்பர் 1 பவுலர் யார் தெரியுமா?

Published : Dec 17, 2021, 03:23 PM IST
2021ம் ஆண்டின் டாப் 5 டெஸ்ட் பவுலர்கள்..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு.. நம்பர் 1 பவுலர் யார் தெரியுமா?

சுருக்கம்

2021ம் ஆண்டின் சிறந்த 5 டெஸ்ட் பவுலர்களை ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார்.  

2021ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய டாப் 5 பவுலர்களை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார். 

2021ம் ஆண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினை இந்த லிஸ்ட்டில் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இவ்வளவுக்கும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடாமலேயே 52 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தியிருக்கிறார்.

இந்த பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சனை தேர்வு செய்துள்ளார் சோப்ரா. ஒவ்வொரு ஆண்டுமே டாப் 5 டெஸ்ட் பவுலர்களில் இடம்பெற தகுந்த பவுலரான ஆண்டர்சன், 2021ம் ஆண்டு 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக பந்துவீசியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். சென்னை டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய அவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

2021ம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 28 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சனையும் இந்த பட்டியலில் ஒருவராக தேர்வு செய்துள்ளார் சோப்ரா.

2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட் ஆகிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் முகமது சிராஜ், 2021ம் ஆண்டு 9 டெஸ்ட்டில் 28 விக்கெட் வீழ்த்திய நிலையில், அவரையும் 2021ம் ஆண்டு டாப் 5 டெஸ்ட் பவுலர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

இந்த பட்டியலில் நம்பர் 1 பவுலராக பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடியை தேர்வு செய்துள்ளார். 2021ம் ஆண்டு 9 டெஸ்ட்டில் 47 விக்கெட் வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடியை இந்த ஆண்டின் நம்பர் 1 பவுலராக சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!