PAK vs WI ரிஸ்வான்- பாபர் அசாம் அதிரடி பேட்டிங்; வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Dec 16, 2021, 11:03 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது பாகிஸ்தான். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.

கராச்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஆடிய அனைத்து வீரர்களுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் 43 ரன்களும், ப்ரூக்ஸ் 49 ரன்களும் அடித்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் நிகோலஸ் பூரன் 37 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்தார். டேரன் பிராவோ 34 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் அடித்தது.

208 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வானும் பாபர் அசாமும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 158 ரன்களை குவித்து வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து கொடுத்தனர். இருவருமே அரைசதமடித்த நிலையில், பாபர் அசாம் 53 பந்தில் 79 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரிஸ்வானும் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்கள் ஆட்டமிழந்தாலும், கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் கொண்டுவந்துவிட்டு ஆட்டமிழந்ததால், அதன்பின் வந்த வீரர்களுக்கு வேலை எளிதானது. ஆசிஃப் அலி 7 பந்தில் 21 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார்.

3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.

click me!