2வது டெஸ்ட்டில் 419 ரன் வித்தியாசத்தில் ஆஸி.,அபார வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது ஆஸி.,

By karthikeyan V  |  First Published Dec 11, 2022, 2:57 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 2-0 என ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
 


வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் ஆடியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய அணி:

Tap to resize

Latest Videos

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசெர், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு பதிலாக இணையும் ஃபாஸ்ட் பவுலர்..!

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), சந்தர்பால், ஷமர் ப்ரூக்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டெவான் தாமஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், அல்ஸாரி ஜோசஃப், ஆண்டர்சன் ஃபிலிப், மார்குயினோ மைண்ட்லி.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். லபுஷேன் - ஹெட் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 4வது விக்கெட்டுக்கு லபுஷேன் - ஹெட் ஜோடி 297 ரன்களை குவித்தது.  லபுஷேன் 163 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களுக்கும் ஆட்டமிழந்து இருவருமே இரட்டை சதத்தை தவறவிட்டனர். 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராத்வெயிட் (19), ஷமர் ப்ரூக்ஸ்(8), ஜெர்மைன் பிளாக்வுட் (3) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். 47 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த சந்தர்பாலும் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆண்டர்சன் ஃபிலிப் 43 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ரோஸ்டான் சேஸ் 34 ரன்களும், ஜோஷுவா ட சில்வா 23 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 214 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டானது.

297 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. எனவே மொத்தமாக 496 ரன்கள் முன்னிலை பெற்று, 497 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது.

ரோஹித், கங்குலி, கெய்ல் சாதனைகள் காலி.. இரட்டை சதம் விளாசி ஏகப்பட்ட சாதனைகளை வாரிக்குவித்த இஷான் கிஷன்

497 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவிடம் சீட்டுக்கட்டாய் சரிய வெறும் 77 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டாக, 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
 

click me!