பேட் கம்மின்ஸ் வேகத்தில் சரண்டரான பாகிஸ்தான் – 2ஆவது டெஸ்டிலும் வெற்றி! 2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸி!

By Rsiva kumar  |  First Published Dec 29, 2023, 3:58 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.


ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26ஆம் தேதி தொடங்கியது.

SA vs IND:ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி - 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்ட ஆவேஷ் கான்!
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.        முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 63 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் பேட் கம்மின்ஸ் வேகத்தில் 264 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபீக் 62 ரன்கள் எடுத்தார்.

Tap to resize

Latest Videos

முதலில் கிரிக்கெட் இப்போ அரசியல் - ஆடுகளத்தை மாற்றி களமிறங்கிய அம்பதி ராயுடு – அடுத்து தேர்தல் பிரச்சாரம்!

இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களும், அலெக்ஸ் கேரி 53 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 262 ரன்கள் குவித்து, 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதன் பிறகு 316 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் ஷான் மசூத் மட்டும் நிதானமாக விளையாடி 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அகா சல்மான் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்களான அமீர் ஜமால், ஷாகீன் அஃப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் டக் அவுட்டில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில்      237 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி சிட்னியில் நடக்க இருக்கிறது.

click me!