தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆவேஷ் கான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இதில் 1-1 என்று டெஸ்ட் தொடர் சமன் செய்யப்பட்ட நிலையில், 2-1 என்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதில், 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே இந்தியா 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியை இழந்த நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்ய கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷமி இல்லாத நிலையில் ஒருநாள் தொடரில் கலக்கிய ஆவேஷ் கானை அணியில் இந்திய அணி சேர்த்துள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம் பெற்று விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஒருநாள் தொடரில் விளையாடிய ஆவேஷ் கான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான், அவர், 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 03 ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ரி, மெக்ராத் அதிராடியால் ஆஸி, மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!