இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ரன்களில் ஆட்டமிழந்த பாட்டம் 6 பிளேயர்ஸ்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஷஃபாலி வர்மா ஒரு ரன்களில் ஆட்டமிழக்க, யாஷ்டிகா பாட்டியா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்களில் வெளியேற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலைத்து நின்று விளையாடி 82 ரன்கள் குவித்தார். ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 21 ரன்களில் ஆட்டமிழக்க, அமன்ஜோத் கவுர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த பூஜா வஸ்த்ரேகர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா மகளிர் அணியில் கேப்டன் அலீசா ஹீலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபோப் லிட்ச்ஃபீல்டு மற்றும் எல்லீஸ் பெர்ரி இருவரும் இணைந்து சரமாரியாக விளையாடி ரன்கள் குவித்தனர். 2ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 148 ரன்கள் குவித்தது. எல்லிஸ் பெர்ரி 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த பெத் மூனி 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். லிட்ச்பீல்டு 78 ரன்களில் வெளியேற, கடைசியில் வந்த தஹீலா மெக்ராஹ் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 1-0 என்று முன்னிலையில் பெற்றுள்ளது. இதுவரையில் ஆஸ்திரேலியா அணியை ஒருநாள் தொடரில் இந்திய அணி வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 289 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதே போன்று, 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 280 ரன்களை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. தற்போது மீண்டும் 2ஆவது முறையாக 282 ரனக்ளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தி வெற்றி கண்டுள்ளது.