Asia Cup 2023: பாகிஸ்தானில் 4, இலங்கையில் 9 போட்டிகள் நடத்தப்படும் - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!

By Rsiva kumar  |  First Published Jun 11, 2023, 3:05 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000, 5000 ரன்கள் அடித்த விராட் கோலி!

Tap to resize

Latest Videos

மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது. ஆனால் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதற்கெல்லாம் அசரவில்லை.

சுப்மன் கில் அவுட்டா? நாட் அவுட்டா? டிவி அம்பயரை கலாய்த்து தள்ளிய மீம்ஸ்!

பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் விக்கெட்டிற்கு ஏன் சாப்ட் சிக்னல் முறை இல்லை? எம்சிசி கிரிக்கெட் சட்டம் 33.3 என்ன சொல்கிறது?

பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள்
 

பாகிஸ்தான் – நேபாள்

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் – இலங்கை

இலங்கை – வங்கதேசம்

இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் நடத்த ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு வர உள்ளது.

இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!

click me!