ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000, 5000 ரன்கள் அடித்த விராட் கோலி!

Published : Jun 11, 2023, 02:13 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000, 5000 ரன்கள் அடித்த விராட் கோலி!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சுப்மன் கில் அவுட்டா? நாட் அவுட்டா? டிவி அம்பயரை கலாய்த்து தள்ளிய மீம்ஸ்!

இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக 444 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், சுப்மன் கில் சர்ச்சையான முறையில் கேட்சானார். அவர், 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 43 ரன்களில் வெளியேறினார்.

சுப்மன் கில் விக்கெட்டிற்கு ஏன் சாப்ட் சிக்னல் முறை இல்லை? எம்சிசி கிரிக்கெட் சட்டம் 33.3 என்ன சொல்கிறது?

அடுத்த ஓவரிலேயே புஜாராவும் 27 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர்.  இதில், விராட் கோலி 7 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதற்கு முன்னதாக

சச்சின் டெண்டுல்கர் – 3630 ரன்கள் – 39 போட்டிகள் – 11 சதம்

விவிஎஸ் லட்சுமணன் – 2434 ரன்கள் – 29 போட்டிகள் – 6 சதம்

ராகுல் டிராவிட் – 2143 ரன்கள் – 32 போட்டிகள் – 2 சதம்

சட்டேஷ்வர் புஜாரா – 2074 ரன்கள் – 25 போட்டிகள் – 5 சதம்

விராட் கோலி – 2025 (இந்தப் போட்டி) ரன்கள் – 25 போட்டிகள் – 8 சதம்

இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!

ஆகியோர் அதிக ரன்கள் குவித்துள்ளனர். இதே போன்று இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் 2000 ரன்களை கடந்துள்ளார். அதுமட்டுமின்றி விராட் கோலி சரவதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர், சச்சின் டெண்டுல்கர் 141 இன்னிங்ஸில் 6707 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 20 சதங்களும் அடித்துள்ளார்.

இவர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிரையன் லாரா 108 இன்னிங்ஸில் 4714 ரன்களும், டேஸ்மண்ட் ஹேன்ஸ் 123 இன்னிங்ஸில் 4495 ரன்களும், விவியன் ரிச்சர்ட்ஸ் 104 இன்னிங்ஸில் 4453 ரன்களும் எடுத்துள்ளனர்.

கண்ணை மூடிக் கொண்ட நடுவர்; சந்தேகம் என்றால் நாட் அவுட் தான் – விரேந்திர சேவாக் விமர்சனம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!