பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்லாம் இருக்காங்க.. ஆனால் அந்த பையன் வேற லெவல் பேட்ஸ்மேன்! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 4:33 PM IST
Highlights

பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் திறமையான இளம் வீரர்கள் தான் என்றாலும், ஷுப்மன் கில் பெரிய சதம் அடிக்கக்கூடியவர் என்று ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில், இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்து, ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் ஆட அணியை தயார் செய்ய வேண்டியிருக்கிறது.

இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், இஷான் கிஷன் என பெரிய பட்டாளமே இந்திய அணியில் உள்ளது. ரோஹித், கோலி, ராகுல் ஆடாத நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஒருநாள் தொடரில் கில் சிறப்பாக ஆடிவருகிறார். 

ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம்.. ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை (42 ரன்கள்) விளாசி வரலாற்று சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் அடித்த கில், 2வது ஒருநாள் போட்டியில் 45 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். அத்துடன் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பிரித்வி ஷாவை 3 விதமான ஃபார்மட்டிலும் ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஷுப்மன் கில் குறித்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சதங்களை அடிக்கக்கூடிய வீரர். சூழலுக்கும் கண்டிஷனுக்கும் ஏற்ப ஆடக்கூடியவர் கில். நியூசி.,க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிடும் முன் கில் ஆடிய விதம் வேறு. மழைக்கு பின் சூர்யகுமார் அடித்து ஆடியதும், கில் ஆடிய விதம் வேறு. எப்போது வேண்டுமானாலும் கியரை மாற்றவல்ல வீரர். பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் மாதிரியான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் கில் பெரிய சதங்களை அடிக்கவல்ல வீரர் என்று புகழாரம் சூட்டினார் நெஹ்ரா.

இந்தியா பாகிஸ்தானுக்கு வரலைனா, நாங்களும் இந்தியா வரமாட்டோம்! ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு கம்பீரின் ரியாக்ஷன்

ஷுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 579 ரன்களையும், 14 ஒருநாள் போட்டிகளில் ஆடி 674 ரன்களையும் குவித்துள்ளார்.

click me!