விஜய் ஹசாரே டிராபி: காலிறுதியில் தமிழ்நாடு அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த சௌராஷ்டிரா

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 2:09 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணி 50 ஓவரில் 293 ரன்களை குவித்து, 294 ரன்கள் என்ற சவாலான இலக்கை தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு அணி காலிறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தமிழ்நாடு அணி:

சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர், எம் முகமது, சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர்.

NZ vs IND: 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கியது ஏன்..? ஷிகர் தவான் விளக்கம்

முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணியின் சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 62 ரன்களுக்கு ஹர்விக் ஆட்டமிழந்தார். ஜெய் ஜோஹில் (34) மற்றும் சமர்த் வியாஸ் (27) ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர்.

பின்னர் ஆர்பிள் வசவடா (51) மற்றும் சிராக் ஜானி (52) ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, 50 ஓவரில் சௌராஷ்டிரா அணி 293 ரன்களை குவித்தது.

உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

தமிழ்நாடு அணி 294 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிவருகிறது. தமிழ்நாடு அணியின் தொடக்கவீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவருமே செம ஃபார்மில் இருப்பதால் இந்த இலக்கை தமிழ்நாடு அணி அடித்து ஜெயித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!