இந்தியா பாகிஸ்தானுக்கு வரலைனா, நாங்களும் இந்தியா வரமாட்டோம்! ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு கம்பீரின் ரியாக்ஷன்

By karthikeyan VFirst Published Nov 27, 2022, 10:05 PM IST
Highlights

2023ல் பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கருத்து கூறியிருந்த நிலையில், அதற்கு கௌதம் கம்பீர் ரியாக்ட் செய்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012ம் ஆண்டுக்கு பின் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்திய அணி 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

உலக கோப்பையை ஜெயிக்கணும்னா ஐபிஎல்லில் ஆடாதீங்க..! ஒரே போடாய் போட்ட ரோஹித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர்

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லாது. பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

ஜெய் ஷாவின் இந்த கருத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது. பாகிஸ்தான் ஆடவில்லை என்றால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை யார் பார்ப்பார்..? நாங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளவுள்ளோம். எங்கள் அணி நல்ல கிரிக்கெட் ஆடிவருகிறது. டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியிருக்கிறோம் என்றார் ரமீஸ் ராஜா.

NZ vs IND: இந்திய பவுலிங்கை பிரித்து மேய்ந்த டாம் லேதம் அபார சதம்! முதல் ODI-யில் நியூசிலாந்து அபார வெற்றி

இதுகுறித்து கௌதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், இதுதொடர்பாக பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவெடுத்தாலும் இரு வாரியங்களும் இணைந்துதான் எடுக்க வேண்டும் என்றார் கம்பீர்.
 

click me!