ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா அரைசதம்! 2வது ODI-யில் இலங்கைக்கு எளிய இலக்கை நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 27, 2022, 7:01 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 228 ரன்கள் அடித்து, 229 ரன்கள் என்ற எளிய இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, குல்பாதின் நைப், ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், யாமின் அஹமத்ஸாய், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

NZ vs IND: 2வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்கியது ஏன்..? ஷிகர் தவான் விளக்கம்

இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, தனஞ்செயா லக்‌ஷன், மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் வெறும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ரஹ்மத் ஷா  ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் 68 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 58 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்து, 48.2 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்வரிசையில் முகமது நபி மட்டும் நன்றாக ஆடி 41 ரன்கள் அடித்தார்.

NZ vs IND: 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதிப்பு..! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த ரசிகர்கள்

இலங்கை அணி 229 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. இந்த போட்டியில் ஜெயித்தால் தான் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் வெற்றி கட்டாயத்துடன் இலக்கை விரட்டுகிறது இலங்கை அணி.
 

click me!