டிராவிட் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்ததை ஜெயவர்தனே மூலம் இலங்கைக்கு செய்ய முயன்றும் முடியல- அரவிந்த் டி சில்வா

By karthikeyan VFirst Published Jul 9, 2021, 8:42 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டுக்கு ராகுல் டிராவிட் இளம் திறமைசாலிகளை உருவாக்கி கொடுத்ததை போல, ஜெயவர்தனேவை வைத்து இலங்கைக்கு சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி கொடுக்க முயன்றதாகவும், ஆனால் அது முடியவில்லை என்றும் அரவிந்த் டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணி, இன்றைக்கு ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு விதமான சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு தரமான வீரர்களை கொண்டிருக்கிறது என்றால், அதற்கு ராகுல் டிராவிட் தான் முக்கியமான காரணம். 

இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ  அணிகளின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல திறமையான வீரர்களை உருவாக்கி இந்திய கிரிக்கெட்டிற்கு கொடுத்தார். அதன் விளைவாகத்தான் இன்றைக்கு இந்திய அணி நல்ல பென்ச் வலிமையுடன் திகழ்கிறது. ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கான ஏராளமான தரமான கிரிக்கெட்டர்களை பெற்றிருக்கிறது.

இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், முதல் முறையாக இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இலங்கை சென்றுள்ளார். இந்திய அணி ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை வெகுவாக புகழ்ந்த இலங்கை முன்னாள் ஜாம்பவான் அரவிந்த் டி சில்வா, ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பணியை இலங்கை லெஜண்ட் கிரிக்கெட்டர் ஜெயவர்தனேவை வைத்து இலங்கைக்கு ஆற்ற முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அரவிந்த் டி சில்வா, இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டபோது, இந்தியா சிறந்த காரியத்தை செய்ததாக நான் நம்பினேன். அதேபோலவே இலங்கை அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக ஜெயவர்தனேவை நியமிக்க முயன்றேன். ஆனால் என்னுடைய அந்த முயற்சியில் நான் ஜெயிக்கவில்லை என்று அரவிந்த் டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

click me!