எத்தனை சான்ஸ் கொடுத்தாலும் வீணடிச்சுகிட்டே தான் இருப்பேன்.. அடம்பிடிக்கும் சீனியர் வீரர்..! மற்றுமொரு சொதப்பல்

Published : Jul 23, 2021, 07:18 PM ISTUpdated : Jul 23, 2021, 07:25 PM IST
எத்தனை சான்ஸ் கொடுத்தாலும் வீணடிச்சுகிட்டே தான் இருப்பேன்.. அடம்பிடிக்கும் சீனியர் வீரர்..! மற்றுமொரு சொதப்பல்

சுருக்கம்

இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டார்.   

சர்வதேச கிரிக்கெட்டில் ஆட திறமை, ஃபிட்னெஸ் மற்றும் மனநிலை என அனைத்துவகையிலும் தயாராகிவிட்ட போதிலும், இந்திய அணியில் இடம் இல்லாத காரணத்தால் ஆடமுடியாமல் இருந்த வீரர்களுக்கெல்லாம் இலங்கை தொடர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்தவகையில், முதல் இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகிய 4 வீரர்களும் இன்று நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். சஞ்சு சாம்சன் அருமையாக ஆடி 46 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

முதல் 2 போட்டிகளிலும் நன்றாக ஆடிய சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் நன்றாக ஆடிவருகிறார். இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, நன்றாக ஆடி ஸ்கோர் செய்து டஃப் ஃபைட் கொடுக்கின்றனர்.

ஆனால் பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் மனீஷ் பாண்டே, சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் ஆட கிடைக்கும் வாய்ப்பு எதையுமே சரியாக பயன்படுத்துவதில்லை. அவருக்கு அவ்வப்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆடும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் அளிக்கும் வாய்ப்புகளை வீணடித்துவருகிறார் மனீஷ் பாண்டே.

இந்த தொடரிலும் முதல் 2 போட்டிகளிலுமே சரியாக ஆடாத அவருக்கு, கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று நடந்துவரும் அந்த போட்டியிலும் 19 பந்தில் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அந்தளவிற்கு வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். அப்படியிருக்கையில், தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் வீணடித்துவருகிறார் மனீஷ் பாண்டே.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்