அரிதினும் அரிதான சம்பவம்.. நிராயுதபாணியாக நின்ற ஆண்ட்ரே ரசல்

Published : Aug 23, 2020, 08:02 PM IST
அரிதினும் அரிதான சம்பவம்.. நிராயுதபாணியாக நின்ற ஆண்ட்ரே ரசல்

சுருக்கம்

கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆண்ட்ரே ரசல் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தும் கூட, வெறும் 119 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் அவர் ஆடும் ஜமைக்கா தல்லாவாஸ் அணி, கயானா வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.   

கரீபியன் பிரீமியர் லீக்கில் நேற்று கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா தல்லாவாஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி,  20 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் யாருமே சரியாக ஆடி நன்றாக ஸ்கோர் செய்யவில்லை. தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் 29 ரன்களும், சந்தர்பால் ஹேம்ராஜ் 21 ரன்களும், ரோஸ் டெய்லர் 21 ரன்களும் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பவுலர் நவீன் உல் ஹக் தன் பங்கிற்கு 14 ரன்கள் அடித்ததால், அந்த அணி 20 ஓவரில் 118 ரன்கள் அடித்தது.

119 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே டக் அவுட்டாகினர். கேப்டன் ரோவ்மன் பவல் 30 பந்தில் 23 ரன்களும் ஆசிஃப் அலி 20 பந்தில் 14 ரன்களும் அடித்தனர். கார்லஸ் பிராத்வெயிட் 14 பந்தில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். இலக்கு எளிதானது தான் என்றாலும், இவர்கள் அனைவருமே அதிகமான பந்தில் குறைந்த ரன்கள் அடித்து, நிறைய பந்துகளை வீணடித்ததால், ஜமைக்கா தல்லாவாஸ் அணி மீதான நெருக்கடி அதிகரித்தது. 
 
அதனால், 7ம் வரிசையில் இறங்கிய ஆண்ட்ரே ரசல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தும் கூட, அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. ஆண்ட்ரே ரசல் தனது வழக்கமான பாணியில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ரசல் அரைசதம் அடித்தார். 37 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும்  சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் சரியான பார்ட்னர் இல்லாததாலும், முன்வரிசை வீரர்கள் அதிகமான பந்துகளை வீணடித்ததாலும், ரசலால் அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 104 ரன்கள் மட்டுமே அடித்து 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி தோல்வியடைந்தது.

கரீபியன் பிரீமியர் லீக்கில், 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்டிய அணியை அடிக்கவிடாமல் சுருட்டிய மிகக்குறைந்த இலக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!