ஸ்மித்தை மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கலாமா? கூடாதா? ரிக்கி பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 23, 2020, 5:40 PM IST
Highlights

ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்துவந்த நிலையில், 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்டிய விவகாரத்தில், கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி பொறுப்பை இழந்தார். ஒருநாள் மற்றும் டி20 ஆஸ்திரேலிய அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் இப்போது வரை கேப்டன்களாக செயல்பட்டுவருகின்றனர். 

ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் உள்ளன. இந்நிலையில், 35 வயதான டெஸ்ட் கேப்டன் டிம் பெயன், 2021-2022 ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் தடை முடிந்து மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்தபோது, மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்தது. எனவே டிம் பெய்னுக்கு பிறகு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஸ்மித் ஏற்பதற்கான வாய்ப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உயிர்ப்புடன் வைத்துள்ளது. 

இந்நிலையில், மீண்டும் ஸ்மித்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஸ்மித் மீண்டும் கேப்டனாவதற்கான கதவை இன்னும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா திறந்தே தான் வைத்திருக்கிறது. ஆனால் ஸ்மித் கேப்டனாவதை ஆஸ்திரேலியர்கள் விரும்புகிறார்களா என்று பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியர்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ஸ்மித்தை கேப்டனாக்கலாம். ஆனால் மக்கள் அதை விரும்பவில்லையென்றால், அது பேரழிவாக அமையும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

click me!