இங்கிலாந்திற்கு எதிரான 4அவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப் அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றியும் நோபால் காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்தார். இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் மார்க் வுட் மற்றும் ரெஹான் அகமது இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆலி ராபின்சன் மற்றும் சோயிப் பஷீர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முகமது சிராஜ் முதல் ஓவரை வீசினார். 2ஆவது ஓவரை அறிமுக வீரர் ஆகாஷ் தீப் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் கொடுத்தார். மீண்டும் 4ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 5ஆவது பந்தை வலது கை பேட்ஸ்மேனான ஜாக் கிராவ்லி எதிர்கொண்டார். இதில், ஆஃப் ஸ்டெம்ப் அந்தர் பல்டி அடித்த நிலையில் ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடினார்.
ஆனால், அது ஒரு சில வினாடிகளில் மட்டுமே. நடுவர் நோபால் அறிவிக்கவே ஆகாஷ் தீப் ஏமாற்றம் அடைந்தார். எனினும், போட்டியின் 10ஆவது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை எடுத்து தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.
WHAT A BALL....🤯 But it's a no-ball.
- Feel for Akash Deep on his debut. pic.twitter.com/1zeC3YkY3j