பும்ராவிற்கு ஓய்வு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் – இங்கிலாந்து பேட்டிங்!

Published : Feb 23, 2024, 09:22 AM IST
பும்ராவிற்கு ஓய்வு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் – இங்கிலாந்து பேட்டிங்!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் மார்க் வுட் மற்றும் ரெஹான் அகமது இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆலி ராபின்சன் மற்றும் சோயிப் பஷீர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

இங்கிலாந்து:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேபன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஆலி ராபின்சன், சோயிப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!