பாண்டியா வேண்டாம்.. இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னைக்கு தீர்வு சொல்லும் அகார்கர்..!

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 6:16 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருக்கும் 6வது பவுலிங் ஆப்சனுக்கு தீர்வு கூறியுள்ளார் அஜித் அகார்கர்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து (க்ரூப் 1) மற்றும் பாகிஸ்தான் (க்ரூப் 2) ஆகிய 2 அணிகளும் ஒரு அடியை எடுத்து அரையிறுதிக்குள் வைத்துவிட்டன. 

அரையிறுதிக்கு 2வது  அணியாக முன்னேற, க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயும், க்ரூப் 2ல் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது.

அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்ய வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று துபாயில் மோதுகின்றன. இந்த போட்டியில் மட்டுமல்லாது, இந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே இந்திய அணியின் பெரும் பிரச்னையாக திகழும் ஒரு பிரச்னைக்கு தீர்வு கூறியுள்ளார் அஜித் அகார்கர்.

இதையும் படிங்க - நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய அணியை மிகக்கடுமையாக எச்சரித்த கவாஸ்கர்..!

ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லாததால் இந்திய அணி, ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லாதவகையில் சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய நிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 6வது பவுலிங் ஆப்சன் இல்லாததுதான் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்தது.

நியூசிலாந்து எதிராக போட்டிக்கு தயாராகும்போது வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியிருக்கிறார். ஆனாலும் கூட 6வது பவுலிங் ஆப்சனாக அவரை பயன்படுத்துவது பலனளிக்காது என்றும், அதற்கு பதிலாக விராட் கோலியே 6வது பவுலிங் ஆப்சனாக இருந்து ஒருசில ஓவர்களை வீசலாம் என்று அகார்கர் கருத்து கூறியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹர்திக் பாண்டியா பந்துவீசவேயில்லை. ஐபிஎல்லிலும் மும்பை அணிக்காக பாண்டியா பந்துவீசவில்லை. டி20 உலக கோப்பை பயிற்சி போட்டிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என எதிலுமே பாண்டியா பந்துவீசாத நிலையில், வலையில் பந்துவீசியதன் அடிப்படையில் மட்டுமே அவரை போட்டியில் பந்துவீசவைக்கக்கூடாது என்பது அகார்கரின் கருத்து.

இதையும் படிங்க - நியூசிலாந்தின் இந்த ஒரு அஸ்திரத்தை ரோஹித் அடித்து காலி செய்துவிட்டால் அவர் தான் மேட்ச் வின்னர்..! வெற்றி நமதே

இதுகுறித்து பேசியுள்ள அகார்கர், ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் பந்துவீசியிருந்தாலும், அவர்  நேரடியாக மேட்ச்சில் பந்துவீசி 2 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2 மாதமாக பந்துவீசாமல், நேரடியாக போட்டியில் வந்து பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்பது ஒரு பவுலராக எனக்கு நன்றாக தெரியும். முழு ஃபிட்னெஸுடன் இல்லாத வீரரை பந்துவீசவைப்பது அணிக்கு ஆபத்தானது. இதில் அந்த பவுலரின் தவறு எதுவும் கிடையாது. அது ரிஸ்க்காகிவிடும். 2 மாதங்களாக பந்துவீசாத பவுலர், 2 நாள் பயிற்சியில் நேரடியாக மேட்ச்சில் வீசுவது சாத்தியமற்றது. எனவே இந்திய அணி ஏற்கனவே ஆடியதை போல 5 பவுலர்களுடன் மட்டுமே ஆடலாம். 6வது பவுலிங் ஆப்சனாக கோலியே ஒன்றிரண்டு ஓவர்கள் வீசலாம் என்று அகாகர்கர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

click me!