ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.9 கோடிக்கு ஏலத்தில் இடம் பெற்று விளையாடிய தமிழக வீரர் ஷாருக் கான் விடுவிக்கப்பட்ட நிலையில் தனது அடிப்படை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வரும் 19 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இது ஒரு புறம் இருக்க, இந்த ஏலத்திற்கு மட்டும் 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளனர். இதில், 830 இந்திய வீரர்கள், 336 வெளிநாட்டு வீரர்கள், 909 புதிதாக பதிவு செய்த வீரர்கள், 212 வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள். 45 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் என்று 1166 வீரர்கள ஐபிஎல் ஏலத்திற்கு தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.5.25 கோடிக்கு தமிழக வீரரான ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரூ.9 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ஷாருக் கான் 14 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஷாருக் கான் மொத்தமாக 33 போட்டிகளில் 31 இன்னிங்ஸ் விளையாடி 426 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் குஜராத் டைட்டன்ஸ் அணி வரையில் தமிழக வீரரான ஷாருக் கானை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி போடும் என்று ராஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார்.
கூச் பெஹர் டிராபியில் மகன் விளையாடுவதை தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்த ராகுல் டிராவிட்!
இது ஒரு புறம் இருக்க, ஷாருக்கானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தனது அடிப்படை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஷாருக் கான் இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக் கான் மட்டுமின்றின்றி உலகக் கோப்பையில் ஜொலித்த நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவும் தனது அடிப்படையை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்துள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!