தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்!

By Rsiva kumar  |  First Published Jul 18, 2023, 11:03 AM IST

வெறும் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலமாக சீனியர் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று, 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

தோனியின் பைக் கலெக்‌ஷனைப் பார்த்து வாயடைத்துப் போன வெங்கடேஷ் பிரசாத் – வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

ஒரேயொரு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 19 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, 19 டி20 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று 52 போட்டிகள் விளையாடி 1797 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், தான் இந்திய அணியில் கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என்று சீனியர் வீரர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரராக கனவு காணும் இளைஞர்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்க கூடாது: ரிங்கு சிங்!

அண்மையில் ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதற்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையில் சீனாவின் ஹாங்சோவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, ஷிவம் மவி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் பலர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, அஜின்க்யா ரஹானே ஆகியோர் இருக்கும் நிலையில், இனி வரும் ஐபிஎல் தொடர்களில் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்தார். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆஃப் கூட வர முடியாமல் வெளியேறியது.

8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!

ஆதலால், இனி வரும் ஐபிஎல் தொடர்களில் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!