
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இன்று நடக்கும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்
இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்கா மற்றும் மதீஷா பதிரனா ஆகிய இருவரும் அறிமுகம் ஆகின்றனர்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, மதீஷா பதிரனா.
இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு
ஆஃப்கானிஸ்தான் அணி:
ரஹ்மதுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், கரிம் ஜனத், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.