ஒரு மாசமா பேட்டை தொடவே இல்ல.. தனது மோசமான ஃபார்ம் பற்றி மௌனம் கலைத்த விராட் கோலி

Published : Aug 27, 2022, 04:07 PM IST
ஒரு மாசமா பேட்டை தொடவே இல்ல.. தனது மோசமான ஃபார்ம் பற்றி மௌனம் கலைத்த விராட் கோலி

சுருக்கம்

கடைசி 10 ஆண்டுகளில் கடந்த ஒரு மாதம் தான், தான் பேட்டை தொடாமல் இருந்ததாக விராட் கோலி கூறியிருக்கிறார்.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த சுமார் 3ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கமுடியாமல் திணறிவருகிறார்.  3 ஆண்டுகளாகவே அவர் சரியான ஃபார்மிலும் இல்லை. 

இந்நிலையில், கடைசியாக அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் விராட் கோலி ஆடவில்லை. அந்த தொடர்களில் ஓய்வு எடுத்துக்கொண்டார். கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் விராட் கோலி உடல் ரீதியாக சோர்வடைந்தார்.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

எனவே ஒரு பிரேக் எடுப்பது அவருக்கு நல்லது என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறினர்.  அதற்கேற்ப ஒரு ஓய்வு நல்லதுதான் என்பதை உணர்ந்து விராட் கோலியும் ஒரு மாதம் ஓய்வெடுத்துக்கொண்டார். ஆனால் ஃபார்மில் இல்லாத விராட் கோலி தொடர்ச்சியாக ஆடினால் தான் ஃபார்முக்கு வரமுடியும். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து வருவதால் ஜிம்பாப்வே தொடரில் ஆடியிருந்தால் ஃபார்முக்கு வந்திருக்கலாம் என சில முன்னாள் வீரர்கள் கருத்து கூறினர்.

ஆனால் விராட் கோலி ஒரு மாதம் ஓய்வு எடுத்து ரிலாக்ஸ் செய்தார். ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆசிய கோப்பை மற்றும் அடுத்ததாக நடக்கவுள்ள டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களை இந்திய அணி வெல்ல, விராட் கோலி சிறப்பாக ஆடவேண்டியது கட்டாயம். எனவே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

இதற்கிடையே, விராட் கோலி தோனிக்கு கீழ் தான் ஆடிய காலக்கட்டம்தான் தனது கெரியரில் சந்தோஷமான தருணம் என்று பதிவிட்டிருந்தார். அப்படியென்றால் கோலி மீது இப்போது அதிக அழுத்தம் போடப்படுகிறது என்று ரோஹித் - கோலி என்று மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது.

நாளை (ஆகஸ்ட் 28) இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கவுள்ள நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய விராட் கோலி, கடைசி 10 ஆண்டுகளில் இந்த ஒரு மாதம் தான் நான் பேட்டை தொடவேயில்லை. எனது உடலும் மனமும் எனக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்தியது. நான் மனவலிமை உள்ளவன் தான். ஆனால் எவ்வளவுதான் மனவலிமையுடன் இருந்தாலும், அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அதை உணர்ந்து செயல்படவில்லை என்றால் எல்லாமே தவறாகிவிடும் என்று கோலி தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி