ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி டிராபியை வெல்ல வேண்டும் என்பதே தனது ஆசை என்று ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த 1166 வீரர்களில் 77 இடங்கள் மட்டுமே நிரப்ப முடியும்.
ACC U19 Asia Cup 2023: அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான் கூட்டணியால் இந்தியா யு19 அணி வெற்றி!
இந்த 77 வீரர்களில் 47 இந்திய வீரர்களும், 30 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரச்சின் ரவீந்திரா, டிராவிஸ் ஹெட், இப்ராஹிம் ஜத்ரன் என்று ஒவ்வொருவரும் இந்த ஏலத்திற்கான ரேஸில் இடம் பெற்றுள்ளனர்.
WPL 2024 Auction: நாளை மும்பையில் நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஏலம்!
இது குறித்து இப்ராஹிம் ஜத்ரன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வீரரையும் போன்று எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும். இதுவரையில் ஆர்சிபி அணி டிராபியை கைப்பற்றவே இல்லை. ஆதலால், விராட் கோலிக்கு டிராபியை வென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.