பாகிஸ்தானுக்கு எதிரான 22ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 22ஆவது உலகக் கோப்பை லீக் போட்டி சென்னையில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார். அப்துல்லா ஷபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க பலம் வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறி வந்தனர்.
இதில், குர்பாஸ் 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா, ஜத்ரன் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், ஜத்ரன் 113 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து 13 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 45 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், 7 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 2 ஆவது வெற்றியை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் சாதனைகள்:
இதுவரையில் நடந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை ஒரு விக்கெட்டி வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து தற்போது பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.
தேசியக் கொடியை குப்பை தொட்டியில் வீசிய காவல் உதவி ஆய்வாளர்; காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்!
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் எடுத்த அதிகபட்ச ரன்கள்:
288 vs வெஸ்ட் இண்டீஸ், லீட்ஸ் - 2019
286 vs பாகிஸ்தான், சென்னை - 2023
284 vs இங்கிலாந்து, டெல்லி, 2023
272 vs இந்தியா, டெல்லி, 2023
எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர் பிஷன் சிங் பேடி – 1560 விக்கெட்டுகள்!
ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர்:
283 vs பாகிஸ்தான், சென்னை, 2023
274 vs ஐக்கிய அரபு அமீரகம், துபாய், 2014
269 vs இலங்கை, ஹம்பந்தோட்டா, 2023
268 vs ஸ்காட்லாந்து, எடின்பர்க், 2019
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்:
283 by ஆப்கானிஸ்தான், சென்னை,
274 by இந்தியா, செஞ்சூரியன், 2003
267 by வெஸ்ட் இண்டீஸ், பிர்மிங்காம், 1975
243 by தென் ஆப்பிரிக்கா, கராச்சி, 1996
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் எடுத்த அதிக ரன்கள்:
404 – ரஹ்மத் ஷா
365 – ஹஷ்மதுல்லா ஷாகிடி
360 – நஜிபுல்லா ஜத்ரன்
328 - சமியுல்லா ஷின்வாரி
உலகக் கோப்பையில் 275 ரன்களுக்கு மேல் எடுத்து பாகிஸ்தான் தோல்வி
13 - வெற்றி
1 – தோல்வி vs ஆப்கானிஸ்தான்