சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நடிகை ஷாலினி அஜித் குமார், ஷாமிலி, ரிச்சர்டு, சதீஷ், தனுஷ், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர்.
ஐபிஎல் என்றாலே சினிமா பிரபலங்கள் இல்லாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலேயும், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி என்றாலே சொல்லவே வேணாம். ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஸ்டேடியத்தில் கூடும் நிலை உண்டாகும். அப்படி ஒரு சம்பவம் தான் இன்று தொடங்கிய ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் நடந்துள்ளது.
Always love u and 😍😘 pic.twitter.com/n2Z4vHBxmf
இதில், முக்கியமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார். இதே போன்று நடிகர் தனுஷ் தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களது வரிசையில் காமெடி நடிகர் சதீஷ், நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, ஷாமிலி மற்றும் ரிச்சர்டு ஆகியோரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.
From the stands of 💛 pic.twitter.com/JEeJZAaAjB
— Trollywood 𝕏 (@TrollywoodX)
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெடுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. இதில், கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 35 ரன்களும், விராட் கோலி 21 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38* ரன்களும், அனுஷ் ராவத் 48 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
’s family.. 😀 Ma'am.. and are at Chepauk. 💛 pic.twitter.com/lmNgGo3QVD
— Kanchana (@kanchana243)
இதைத் தொடர்ந்து 174 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் வெளியேற ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அஜின்க்யா ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழக்க, டேரில் மிட்செல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது முஷ்தாபிஜூ ரஹ்மானுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் சிஎஸ்கே அணியானது 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.