சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரையை கேட்டு ரசித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது.
இதில், தொடக்க வீரர் பாப் டூப்ளெசிஸ் 35 ரன்கள் குவித்தார். விராட் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், 21 ரன்கள் எடுத்திருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1006 ரன்கள் கடந்து சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்திருந்த போது, தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 6ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
இதன் மூலமாக ஆர்சிபி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. இதில், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தான் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டிக்கு நடுவில் விராட் கோலி டிரெஸிங் ரூமில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் உரையை கேட்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வருகிறது.
Virat was watching Rahul Gandhi ji's press conference??? pic.twitter.com/7iTQSx3SUV
— Ashish 𝕏|.... (@Ashishtoots)