ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது இன்று 2ஆவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட் 77* மற்றும் ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர். அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரூ.125 கோடி பெரியது – 1983 ODI WC டிராபி வென்ற எங்களுக்கு ஒன்றும் கொடுக்கல - முன்னாள் இந்திய வீரர்!
இதில் அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன் பிறகு 24 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை வங்கதேச வீரர் தவறவிட்டார். இதையடுத்து 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மா, அதன் பிறகு 13 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலமாக இந்த ஆண்டில் 47 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மாவின் 46 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக 2ஆவது போட்டியிலே சதம் அடித்து தீபக் கூடா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக கூடா 3ஆவது போட்டியிலும், ராகுல் 4ஆவது போட்டியிலும் சதம் விளாசியிருந்தார். மேலும், அதிவேகமாக சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம் பெற்றுள்ளார்.
சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா, வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங் – இந்தியா 234 ரன்கள் குவிப்பு!
மேலும், இந்திய அணியின் ஹிட்மேனும் தனது முதல் சதத்தை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்திருந்தார். அதே போன்று தான் அபிஷேக் சர்மாவும் தனது முதல் சதத்தை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தை இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா இப்போதே பிடித்துவிட்டார்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். முதல் போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா 2ஆவது போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
கூடா, கேஎல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – 2ஆவது போட்டியிலேயே சதம் விளாசி சாதனை!
இதற்கு முன்னதாக அதிவேகமாக சதம் விளாசியவர்கள்:
35 – ரோகித் சர்மா vs இலங்கை, இந்தூர், 2017
45 – சூர்யகுமார் யாதவ் vs இலங்கை, ராஜ்கோட், 2023
46 – கேஎல் ராகுல் vs வெஸ்ட் இண்டீஸ், லாடர்ஹில், 2016
46 – அபிஷேக் சர்மா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024*