இனிமே அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்ல..!

By karthikeyan VFirst Published May 8, 2021, 9:44 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை என்றால், அவரை இனிமேல் டெஸ்ட் அணியில் பார்க்க முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜூன் 18 முதல் 22 வரை இந்த இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், ஃபைனலுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா

டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டுள்ளார். 3 விதமான இந்திய அணியிலும் முதன்மை வீரராக அணியில் திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, 2018 ஆசிய கோப்பையில் முதுகில் காயமடைந்த பிறகே, அவரது பணிச்சுமை மீது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை. அரிதினும் அரிதாகத்தான் பந்துவீசுகிறார். 

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்போது பந்துவீசாததால் அவர் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை. அவர் இல்லாத டெஸ்ட் அணி நன்றாக செட்டாகி, வெற்றிகளை பெற்றுவருவதால் அவருக்கான அவசியமும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் பாண்டியா புறக்கணிக்கப்பட்டிருப்பது பிரச்னையில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியிலும் பாண்டியாவிற்கு இடம் கிடைக்கவில்லை என்றால், அவரை இனிமேல் டெஸ்ட் அணியில் பார்க்க முடியாது என்றே கருதுகிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!