ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவித்து ராயல் என்பீல்டு பைக்கில் மாஸாக ஊர்வலம் வந்த உமன்ஸ் – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Feb 24, 2024, 10:27 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 2ஆவது போட்டிக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூருவில் ராயல் என்பீல்டு பைக்கில் ஏராளமான மகளிர் ரைடு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகினறன.

 

No shortage of energy & passion in this entry! 😎🔥

The fans have arrived in style for the home side's inaugural game of 2024 💪 pic.twitter.com/RHquDsCQ0Y

— Women's Premier League (WPL) (@wplt20)

Tap to resize

Latest Videos

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலீசா ஹீலி பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2 அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எலீசா பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷோபி மோலினெக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஷ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், ஷோபனா ஆஷா, ரேணுகா தாகூர் சிங்.

யுபி வாரியர்ஸ்:

அலிசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விருந்தா தினேஷ், தஹிலா மெகாத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, ஷோஃபி எக்லெஸ்டான், தீப்தி சர்மா, ஸ்வேதா ஷெராவத், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் கேம்நர், சைமா தாக்கூர்

இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீராங்கனைகள் மைதானத்திற்கு வரும் போது அவர்கள் வந்த சொகுசு பேருந்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு உமன்ஸ் பைக்கில் மாஸாக வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக இது போன்று நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்ப தோன்றும் அளவிற்கு அவர்களது ஆதரவு இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!