ஓம் சக்தி ஆத்தா இந்த ஒரு பந்துல ஜெயிச்சிடணும் என்று சிஎஸ்கேவின் வெறித்தனமான ரசிகர் டிவி முன்பு நின்று கொண்டு வேண்டிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் இறுதி போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரமாக பெய்த மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் அதிரடியாக ஆடினர். இதில், சிஎஸ்கேயின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார்.
ஷேம் ஷேம்…. இப்படியா பண்ணுவீங்க? ஜெய் ஷாவை விளாசும் நெட்டிசன்கள்!
இதில் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கேயின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தான் 5ஆவது பந்தை ஜடேஜா சிஸ்கருக்கு விரட்டினார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 ஃபைனல்: மனைவி, மகள், டிராபியுடன் போஸ் கொடுத்த சிஎஸ்கே வீரர்கள்!
சிஎஸ்கேயின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் சக்தியுள்ள தெய்வமா இருந்தா அம்மா ஒரு பந்துல ஜெயிக்கணுமா அம்மா, ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுரத்து மகமாயி மகமாயி மகமாயி என்று வேண்டிக் கொண்டுள்ளார். கடைசியாக ஒரு பந்தில் பவுண்டரி அடித்து ஜடேஜா அணியை ஜெயிக்க வைத்ததும் கை தட்டி ஆரவாரம் செய்துள்ளார்.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
வழிபாடுகள் பலவிதம்!
ஒவ்வொன்றும் ஒருவிதம்!! ❤️ pic.twitter.com/SvnndXKvep