வரும் 9 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கும், மகளிர் பிரீமியர் லீக் (Womens Premier League (WPL)) தொடரின் முதல் சீசன் 2023 இந்த ஆண்டு நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்றனர். மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியனானது.
பஞ்சாப் கிங்ஸில் ரூ.9 கோடி; அடிப்படையை விலையை ரூ.50 லட்சமாக நிர்ணயித்த தமிழக வீரர் ஷாருக் கான்!
இதைத் தொடர்ந்து 2ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் 9 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 165 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 104 இந்திய வீரர்களும், 15 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 61 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் 30 இடங்கள் உள்ளன. இதில், 9 வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகிய இருவர் மட்டுமே ரூ. 50 லட்சத்திற்கு தங்களது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர்.
இது தவிர, அனாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), எமி ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஜார்ஜியா வேர்ஹோம் (ஆஸ்திரேலியா) ஆகியோர் ரூ.40 லட்சமாக அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளனர். மேலும், ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் 30 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
புல்மாலி பார்தி, வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ராம், பிரியா புனியா, பூனம் ராட், எஸ் மேகனா, மேகனா சிங், தேவிகா வைத்யா, நுஜாத் பர்வீப், சுஷ்மா வெர்மா, சிம்ரன் பஹதூர், ஏக்தா பிஷ்ட், பீரீதி போஸ், கௌஹர் சுல்தானா, பிரத்யுஷா சல்லுரு, மோனிகா பட்டேல், மனிஷ் ஜோஷி, அனுஜா பாட்டீல், ஸ்வாகதிகா ராத், சோனி யாதவ் மற்றும் பிரணவி சந்திரா ஆகிய இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூச் பெஹர் டிராபியில் மகன் விளையாடுவதை தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்த ராகுல் டிராவிட்!
இந்த ஏலத்திற்கு முன்னதாக, 5 அணிகளிலும் 21 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 60 வீராங்கனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 வீராங்கனைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வரும் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் ஏலத்திற்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது ரூ.5.95 கோடியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.1 கோடியையும் இருப்பு தொகையாக (பர்ஸ்) வைத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் ரூ.2.25 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரூ.3.35 கோடியும், யுபி வாரியர்ஸ் ரூ.4 கோடியும் பர்ஸ் தொகையாக வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.