சபரிமலை ஐயப்பன் தரிசனம் – 26ம் தேதி மண்டல பூஜை தொடக்கம்

First Published Dec 16, 2016, 1:35 PM IST
Highlights


சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண்டுகள் பல்வேறு பாதையில் நடந்து சென்று, ஐயப்பனை தரிசனம் செய்தவர்கள், குருசாமி என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு அழைக்கப்படும் குருசாமியின் உதவியுடன் ஒவ்வொரு சீசனிலும், ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

குருசாமி என்பவர், ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது  4 அல்லது 5 முறை சபரிமலைக்கு, ஏராளமான பக்தர்களை அழைத்து சென்று வருகின்றனர்.

இந்தாண்டுக்கான மண்டல பூஜை வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதைதொடர்ந்து தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு தினமும் பல்வேறு ஆராதனைகள், பூஜைகள், அபிஷேகங்கள் நடக்க உள்ளன. இதையொட்டி அடுத்த மாதம் 15ம் தேதி மகர ஜோதி நடைபெறும்.

இதனை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு சென்று ஜோதியை கண்டு தரிசனம் செய்ய உள்ளனர். பம்பை நதி முதல் சபரிமலை வரை அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

click me!