இஞ்சிப்பாறைக்கோட்டை தேவன் வியாக்ரபாதன் ஆலயம் – அழுதாமலை உச்சியில் ஆசி வழங்கும் ஐயப்பன்

First Published Dec 18, 2016, 9:23 AM IST
Highlights


அழுதாமலையின் உச்சியில் "இஞ்சிப்பாறைக்கோட்டை” அமைந்துள்ளது. இங்குள்ள ஆலயத்தில் தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பன் அருள் பாலிக்கிறார். வியாக்ரம்' என்பதற்கு புலி என பொருள். ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார்.

 ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாவங்களை செய்யக் கூட தயாராகி விடுகிறான்.

இந்த பாவங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டும் நிலைத்து நிற்கும். மனிதன் பக்தி மார்க்கத்திற்குள் நிலைத்துவிடுவான். இங்கு ஐயப்பனை வணங்கிட்டு, நடந்து சென்றால், முக்குழி என்ற பகுதி வரும்.

இங்குள்ள மாரியம்மனை வணங்கிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றால், கரியிலம் தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கி செல்ல அனைத்து வசதியும் செய்யப்ட்டுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்து பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடந்து தர்மசாஸ்தாவை தரிசிக்க பக்தர்கள் தங்களது பயணத்தை தொடருகின்றனர்.

அருணாச்சல பிரதேசத்தில் நில அதிர்வு – ரிக்டர் அளவு 3.8 என தகவல்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலையில் நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.8 ரிக்டர் அளவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!