புற்றுநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் புற்றுநோயை ஒழிக்கலாம் என புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறி மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக , புதுச்சேரி உழவர்க்கரை நகராட்சிக்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஸ்வாட்சத ஊழியர்களுக்கும் புற்றுநோயின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவும் விதமாக சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சீருடைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த விழாவினில் புற்றுநோய் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்களுக்கு எளிதில் புரிவது போல கையேடு ஒன்றை சுகாதார துறை வெளியிட்டது.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் அதிலிருந்து குணமடையலாம். எனவே அனைவரும் ஆரம்ப காலகட்டத்திலேயே பரிசோதனை செய்து புற்றுநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும். அரசின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். அது மட்டும் இன்றி ஜி 20 மாநாட்டின் போது புதுச்சேரி முழுவதும் தூய்மையான, அழகான புதுச்சேரியாக இருந்ததற்கு துப்புரவு பணியாளர்கள் காரணம்.
undefined
ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு ஒன்றிணைந்து விழா நடத்திய கிராம மக்கள்
கடந்த நான்கு நாட்களாக தூய்மையாக இருந்த புதுச்சேரியை வருடம் முழுவதும் தூய்மையானதாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள துப்புரவு பணியாளர்கள் உழைக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு அரசு போதிய பணம் காலதாமதம் இன்றி வழங்கி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் குறைந்த லாபம் பார்க்கலாம். அதிக லாபத்திற்காக குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவது சரியானது அல்ல. நமது துறை அதிகாரிகள் அவர்களை வேலை வாங்க வேண்டும். அதேபோல் துப்புரவு பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கினால் மட்டுமே அவர்களாலும் பணி செய்ய முடியும். எனவே துறை அதிகாரிகள் இதில் கவனத்தில் கொண்டு புதுச்சேரியை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கவனக்குறைவாக குழந்தையுடன் சாலையை கடந்த பெண் விபத்தில் தூக்கி வீசப்பட்ட காட்சி
சுகாதார பணியாளர்களும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குப்பைகளை அகற்றும்போது வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தி ஏற்ற வேண்டும் மக்களின் அத்தியாவசியம் என்பதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இடையூறு செய்யக்கூடாது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.