ஏசியாநெட் நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி - வாழ்வாதாரத்திற்காக போராடிய தொழிலதிபரை நெகிழ வைத்த ஆர்வலர்கள்

By Velmurugan s  |  First Published Jul 11, 2023, 5:14 PM IST

கேராளவைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணா தொழிலில் ஏற்பட்ட நட்டம் மற்றும் ஏமாற்றங்களைத் தொடர்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு புதுவையில் கஷ்டப்படுவது தொடர்பாக அண்மையில் செய்தி வெளியான நிலையில், அவருக்கு தன்னார்வலர்கள் உதவி செய்துள்ளனர்.


கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா (வயது 36). பொறியியல் பட்டதாரியான இவர் மும்பையில் வசித்து வந்து வந்தார். விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆகியவற்றின் பணியாற்றியவர். 13 ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் தொழிலதிபராக இருந்துள்ளார். கொரோனா மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இவரது தொழில் முடங்கவே இருக்கும் சொற்பத்தொகை மற்றும் தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் இந்தியா வந்தார்.

Latest Videos

undefined

இந்தியாவில் சிலருக்கு கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக அவர் முயன்ற போது கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் அலைந்த அலைந்து ஏமாற்றம் அடைந்த அவர் தனது காரில் 9-வளர்ப்பு நாய்களையும் ஏற்றிக்கொண்டு வேலை தேடி புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் மூன்று மாதங்களாக குறைந்த வாடகையில் இருந்தும்  அவர் கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட தன்னார்வலர் ஒருவர் முயற்சியால் கிருஷ்ணா நகரில் குடிசையில் தங்கி இருக்கிறார். 

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

தனது வளர்ப்பு நாய்கள்  இரண்டு மற்றும் அதன் குட்டிகள் என 9 நாய்களுடன்  இவர் வசித்து வருகிறார். தனக்கு உணவுக்கு பணம் இல்லாத நிலையிலும்  வளர்ப்பு நாய்களை விடாமல் தன்னிடம் உள்ள சொற்பத்தொகைக்கு நாய்களுக்கு உணவு வைத்து பாதுகாத்து வருகிறார். தன்னிடம் உள்ள  இரண்டு கார்களை விற்று சொந்த ஊருக்கு நாய்களுடன்  சென்று ஏதாவது வேலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு  இவர் இருக்கிறார். 

எஸ்.பி.வேலுமணி இல்லையென்றால் வானதி காணாமல் போய்விடுவார் - ஆளுநர் பேச்சு

தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் தொடர்புகளை இவர் தொடர்பு கொள்ளவில்லை.  வசதியாக இருந்த  தான் மிகவும் நொடிந்து  குடிசையில் இருந்து கஷ்டப்படுவது அறிந்தால் அவர்கள் கவலைப்படுவார்கள் என்பதை என்பதால் யாருக்கும் தனது நிலையை சொல்லாமல் அவர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இது தொடர்பான செய்தி ஏசிய நெட் நியூஸ் தமிழ் செய்தி இணையதளத்தில் வெளியானது. அதன் விளைவாக அவரின் நிலைமை புரிந்து கொண்ட புதுச்சேரி தன்னார்வலர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அவர் காருக்கு பெட்ரோல் நிரப்பி ஒரு சிறிய தொகையை அவரிடம் கொடுத்து தனது வளர்ப்பு நாய் ஒன்பதையும் அவருடன் அனுப்பி வைத்த சம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!