புதுவையில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

By Velmurugan s  |  First Published Jul 10, 2023, 5:23 PM IST

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 300 ரூபாயும். மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு அறிவித்ததை குறைத்து 150 ரூபாய் மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.


புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது  பட்ஜெட்டில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000ம், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். 

இதில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மானியம் 13 ஆயிரம் பேருக்கு வழங்கி திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் புதிய பயனாளிகளுக்கு சுமார் 70 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலைய கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. 21 ஆண்டுகள் கழித்து இந்த பணம் கிடைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

ஜூஸ் பாக்கெட் வடிவில் விற்பனைக்கு வருகிறது 90ml மது - குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் 

இதே போல் சிலிண்டர் மானியத்திற்கு அரசாணை இன்று வெளியாகியுள்ளது. இதில் சிவப்பு நிற ரேசன் கார்டுதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300ம், மஞ்சள் நிற ரேசன் கார்டுக்கு ரூ.150 வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது. 

இன்ஸ்டாகிராம் மூலம் பல மாநிலங்களில் கடை விரித்த இளம் பெண்; 8 திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு தொகை பாதியாக ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை கௌரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் மானிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

click me!