
புதுச்சேரியில் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் எடுத்து 11ம் வகுப்பில் சேர போதிய பணம் இல்லாத காரணத்தால் மாணவன் ஒருவன் தினமும் காலையில் நேரத்தில் வீடு வீடாக பேப்பர் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளான்.
இது குறித்து கேள்விப்பட்ட பெற்றோர் நல சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான நாராயணசாமி மற்றும் அவரது நண்பர்கள் அதிக மதிப்பெண் எடுத்து மேல் படிப்பு படிக்க முடியாமல் பேப்பர் போட்டு வந்த மாணவனுக்கு 11ம் வகுப்பு படிக்க ஆண்டு கட்டணம் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாடபுத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்கினார்கள். மேலும் மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவனின் என்னத்தைச் நிறைவேற்றும் வகையில் ஸ்பெக்ட்ரா கோச்சிங் சென்டரில் இரண்டாண்டு இலவசமாக படிக்க உதவியும் செய்யப்பட்டது.
நாமக்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; கடிதத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை
மேலும் தாய், தந்தையை இழந்து படிக்க முடியாமல் தவித்து வந்த மற்றொரு மாணவிக்கு 9-ஆம் வகுப்பு முதல் பணம் கட்டி படிக்க வைத்து வரும் இவர்கள் மாணவி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்க முதல் பருவ கட்டணம் 21-ஆயிரம் கல்வி கட்டணம் மற்றும் பாடபுத்தகம் வழங்கினார்கள். அதேபோன்று கடந்த 2022ம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்து கல்வி கட்டணம் கட்டி TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி மேல்படிப்பு படிக்க முடியாமல் வீட்டு வேலை செய்து வந்த மாணவிக்கு 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வி கட்டணம் 58-ஆயிரம் கட்டி மாணவி உயர் கல்வி படிக்க TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி கொடுத்தனர்.
நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை
என்னதான் கையில் பணம் இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவதில்லை. ஆனால் உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த கல்வி நிதியுதவி அளிக்க உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.