தங்கம், வெள்ளி என ஆசை வார்த்தை கூறி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் சுருட்டிய பெண்ணுக்கு வலை

By Velmurugan s  |  First Published Feb 17, 2023, 5:13 PM IST

புதுச்சேரியில் தங்கம், வெள்ளி, பித்தளை, இனிப்பு, காரம், பட்டாசு வழங்குவதாகக் கூறி சீட்டு நடத்தி ரூ.80 லட்சத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவான பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


புதுச்சேரி அடுத்த தர்மாபுரியை சேர்ந்தவர் முனியம்மா என்கிற பிரபாவதி, இவர் புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த பொருளை வழங்கி நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த பிரபாவதி தனது மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னை நம்பி பணம் கட்டுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை சீட்டில் சேர்த்துள்ளார்.

மேலும் தள்ளுபடி விலையில் தங்கம், கொல்லிமலையிருந்து மளிகை பொருள், சில்வர், பித்தளை பாத்திரங்கள் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முனியம்மா சீட்டு நடத்தியுள்ளார். இதை நம்பிய பெண் ஊழியர்கள் தனது உறவினர்கள், தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரையும் சீட்டில் சேர்த்துள்ளனர்.

Latest Videos

ஆயிரம் ரூபாய் பணம் கட்டுபவர்களுக்கு நகை இரண்டு கிராம், வெள்ளி 25 கிராம், பித்தளை தவளை, மணிலா எண்னெய் 15 லிட்டர், 25 கிலோ அரிசி மற்றும் இனிப்பு, காரம், பட்டாசு பாக்ஸ் என கவர்ச்சிகரமாக கூறி ஆயிரம் பேரை சீட்டில் சேர்த்தார்.

மீனவர் உயிரிழந்த விவகாரம்; தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

இவர்கள் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் 2022 அக்டோபர் வரை பணம் கட்ட வேண்டும் என்று கூறி சீட்டு பதிந்துள்ளனர். ஆனால் தீபாவளி வருவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதமே முனியம்மா என்கிற பிரபாவதி 80 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்டு தலை மறைவாகிவிட்டார்.

இந்த நிலையில்  முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பிரபாவதி மகன் ராஜ பிரபு தனது அம்மாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சீட்டுக்கட்டிய பெண்களுக்கு தெரிய வரவே அவரது வீட்டை முற்றுகையிட்டு கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு எந்தவித பதிலும் இல்லாததால் இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கடுக்காக துப்பாக்கிகள், கொத்து கொத்தாக தோட்டாக்கள்; காவலர்களை மிரலவிட்ட மர்ம நபர்கள்

அதன் பின்றர் ஐ.ஜி சந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி.சந்திரன், இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

click me!