புதுச்சேரியில் வாத்தி படத்தை வரவேற்று தனுஷ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை வழங்கினர்.
தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் தயாராகி உள்ளது. இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இப்படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து உள்ளார் தனுஷ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
தனுஷ் ‘வாத்தி’யாக பாஸ் ஆனாரா? பெயில் ஆனாரா? - வாத்தி படத்தின் விமர்சனம் இதோ
இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை ஒட்டி புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் உள்ள ரத்னா திரையரங்கில் தனுஷின் வாத்தி படம் திரையிடப்பட்டது. இதனை ஒட்டி தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வாத்தி படம் வெற்றி பெற வேண்டி தனுசுக்கு பிரம்மாண்டமான பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனருக்கு தனுசு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
தொடர்ந்து தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ் தலைமையில் ரத்னா திரையரங்கம் திரையரங்கில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது. மேலும் அண்ணா சாலையில் ஆட்டோ களில் சென்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகங்களை வழங்கினர். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.